மல்வானை அல் முபாறக் தேசிய பாடசாலையினால் கம்பஹா, களணி கல்வி வலயத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட 2024 கல்வியாண்டுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கஹடோவிடஅல் பத்ரியா மகா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று செம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.
எட்டு பாடசாலை அணிகள் கலந்துகொண்ட இப்போட்டித் தொடர் கடந்த ஆகஸ்ட் 10,11 தினங்களில் மல்வானையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் அல்பத்ரியா அணியினர் திஹாரி அல் அஸ்ஹர் அணியினரை வென்று வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments