ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று பிற்பகல் பொரளையில் வைத்து 30 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறும் வேளையில் கைது செய்துள்ளனர்.
மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் கமந்த துஷார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்களில் குறித்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் உள்ளிட்டவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- தமிழ்ன் -
0 Comments