பயனீட்டாளர்கள் புதுப்பிக்கப்பட்ட தனது நிபந்தனைகளுக்கு மே 15ஆம் திகதிக்குள் ஒப்புதல் வழங்காவிட்டால், அவர்களின் குறுந்தகவல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை பயனீட்டாளர்களின் வட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. அதேபோன்று 120 நாட்களுக்கு கணக்குகள் செயல்பாட்டில் இல்லாவிட்டால் அவை அகற்றப்படும் என்றும் கூறப்பட்டது.
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிபந்தனைகளுக்குப் பயனீட்டாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வட்ஸ்அப் செயலியை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனத்துடன் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே புதிய நிபந்தனை விதிக்கப்படுவதாகக் கருதப்பட்டது.
பயனீட்டாளர்களின் ஐ.பீ முகவரி, தளத்தின் மூலம் வாங்கப்படும் பொருட்களைப் பற்றிய விபரங்கள் போன்றவற்றைத் தற்போது பேஸ்புக் உடன் பகிர்ந்துகொள்கிறது வட்ஸ்அப்.
ஆனால் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் உள்ள தனிநபர் பாதுகாப்புச் சட்டங்கள் அதைத் தடுக்கின்றன.
வட்ஸ்அப்பின் நிபந்தனைகள் குறித்த அறிக்கையால், பலரும் டெலிகிராம், சிக்னல் தளங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
புதிய நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்த வட்ஸ்அப், தற்போது மாற்றங்கள் குறித்து பயனீட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் நடைமுறையை மாற்றியுள்ளது.
0 Comments