header ads

நீர்க்கட்டணங்களை குறைக்க அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்களை 7% ஆக குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 20 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வட்டிக் கிரயம் போன்றவற்றின் கிரயம் குறைவடைந்திருப்பதைக் கருத்திலெடுத்து, நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தில் குறைப்பதற்கான இயலுமை காணப்படுகின்றது.

அதற்கமைய, பின்வரும் வகையில் நீர்க்கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இல. கட்டண வகுதி  உத்தேச குறைக்கப்படும் வீதம் (%)

01.  சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் நகர்ப்புற தோட்ட குடியிருப்புகள் தவிர்ந்த வீடுகளுக்கான அலகுகள்  7%

02.  அரச வைத்தியசாலைகள் 4.5 03. பாடசாலைகள் மற்றும் வணக்கத் தலங்கள்         6.3 %

ஒட்டுமொத்த குறைக்கப்பட்ட தொகை 5.94 %



Post a Comment

0 Comments