header ads

நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக அலி சப்ரி இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமைச்சர் அலி சப்ரியின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சுக்கு மேலதிகமாக இந்த புதிய அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக இருந்த அமைச்சுப் பதவிகளை வெளிவிவகார அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் காரணத்தினால் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுப் பதவிகளில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.



Post a Comment

0 Comments