header ads

ஜனாதிபதி வேட்பாளருக்கு விசேட பாதுகாப்பு - 1,600 மில்லியன் ரூபா செலவாகும் : பொலிஸார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 1,600 மில்லியன் ரூபா செலவாகும் என இலங்கை பொலிஸார் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகளின் படி, நாளை முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேவையான பாதுகாப்பு அளவை அமைச்சகம் தீர்மானிக்கும் எனவும் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரின் பாதுகாப்பையும் மேற்பார்வையிட அமைச்சரவை விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

- தமிழன் -



Post a Comment

0 Comments