header ads

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் சில ஷரத்துகள் சர்வசன வாக்கெடுப்புடனும், பாராளுமன்ற விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த நீதிபதிகள் குழு, அதன் தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைத்திருந்தது. 

குறித்த தீர்ப்பை இன்றைய தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments