header ads

திஹாரிய அல் அஸ்ஹர் உயர்தர விஞ்ஞானப் பிரிவு செயற்றிட்டம் அங்குரார்பணம்

அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு செயற்றிட்ட அங்குரார்பண நிகழ்வு நேற்றைய (2024.08.08) தினம் பாடசாலை அதிபர் A.J.M. புர்கான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பிரதம அதிதியாகவும், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அல்-ஹாஜ் நூர்தீன் யாகூப் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்கள்.

கம்பஹா மாவட்டத்தில் விஞ்ஞானத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரதேசத்தின் தனவந்தர்கள், ஒன்று சேர்ந்து இலவச செயற்றிட்டமாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செயற்றிட்டத்தினை ESDS என்ற கல்வி வலையமைப்பு உருவாக்கப்பட்டு செயற்றிட்டத்தினை முன்னெடுத்து நடத்த இருப்பதுடன் பாடசாலை முகாமைத்துவக்குழு உட்பட ஆசிரியர்கள் குலாம், பாடசாலை கல்வி அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழைய மாணவர் சங்கம், பழைய மாணவியர் சங்கம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் பாடசாலையினை மையப்படுத்திய செயற்றிட்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கம்பஹா, மினுவாங்கொடை, களனி வலய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், தனியார் பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகப் பிரதிநிதிகள், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள், செயற்றிட்டக்குழு உறுப்பினர்கள், உதவும் தனவந்தர்கள், பாடசாலை SDEC,OBA,OGA, பாடசாலை கட்டிடக்குழு உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், பெற்றார், மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

விழாவில் பிரதம அதிதியின் உரை அனைவரினதும் உள்ளங்களை வென்றதாகக் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.

பாடசாலை சமூகத்தின் பூரண ஒத்துழைப்புடன் விழா சிறப்பாக இனிதே நிறைவடைந்ததுடன் இச்செயற்றிட்டம் வெற்றி அடைந்து எதிர்பார்க்கப்படும் இலக்குகள் நிறைவேறவும் உதவிக்கரம் கொடுப்போருக்கு நன்மையை ஈட்டித்தரும் தருமமாகவும் அமைய அனைவரும் பிரார்த்திப்பதுடன் இவ்விழாவிற்கு உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியினை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.



Post a Comment

0 Comments