மியான்மர் நாட்டில் இராணுவம் ஆட்சியைப் பிடித்து ஓராண்டை எட்டியதை யொட்டி, இராணுவத்திற்கு எதிராக அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
Yangon நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இராணுவ ஆட்சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்கார்கள் கைகளில் ஏந்தியபடி, முழக்கங்களை எழுப்பினர். அப்போது, கடந்த ஓராண்டாக நாடு பதற்றத்துடனும், மக்கள் இரத்தம் சிந்தி வருவதை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆர்ப்பாட்டக்கார்கள் புகைக் கருவிகளை கைகளில் ஏந்தியபடியும், சிவப்பு வண்ணத்திலான சாயங்களை, தெருக்களில் ஊற்றிய படியும் தங்களது இன்னலை தெரிவித்தனர். இதனிடையே, அமைதிப் போராட்டத்திற்கு இராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததால், நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
0 Comments