சினிமா உலகை பொறுத்த வரை திரைப்படத்திற்கு கதை எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுகின்றார்களோ அந்த திரைப்படத்தில் வரும் இசையை மற்றும் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் சினிமா உ லகில் ஏராளமான இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் வைக்கம் விஜயலட்சுமி ஒருவர். இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். தனது பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர். தன் சிறு வயதிலேயே ஒலி நாடாக்கள் மூலம் பாடல்களை அப்படியே ராகம் தாளம் உடன் பாடி தனது பாடல் திறனை வளர்த்துக் கொண்டார்.
மேலும், மலையாள சினிமாவில் வெளிவந்த செல்லுலாய்டு என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் பாடலுக்கு மாநில அரசின் விருதைப் பெற்றார். மேலும் நாயகன், இடம் பொருள் எவல், விழித்திரு, வீரசிவாஜி, வெள்ளக்காரதுரை, ஜெய்பீம், தெறி, பாகுபலி, கனா போன்ற ஏராளமான திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
மேலும் காயத்ரி வீணை என்ற ஒற்றை கம்பி மட்டுமே கொண்ட அபூர்வ வீணை வைத்துள்ளார். இந்த வீணையை வாசிக்க தெரிந்தவர்களும் வீணை வைத்திருப்பவர்களும் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து காயத்ரி வீணையில் 5 மணி நேரம் 67 பாடல்கள் வாசித்து உலக சாதனை படைத்தார்.
இயக்குனர் அருண் காமராஜ் இயக்கத்தில் வெளிவந்த கனா என்ற திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலைப் பாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். இவரின் அழகான குரலும் பாடலின் உச்சரிப்பும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாடகி வைக்கம் லட்சுமிக்கு திருமணம் நடந்து முடிந்தது. அந்த நிலையில் தனது கணவர் உடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.
0 Comments