கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொவிட்–19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால் தமக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என்றும் தாம் உடல் நலனுடன் இருப்பதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
கொவிட்–19 பொது சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலிருந்து பணியில் ஈடுபடப்போவதாக அவர் கூறினார். ட்ரூடோவின் பிள்ளைகளில் ஒருவருக்கு கடந்த வாரம் தொற்று ஏற்பட்டது. அதையடுத்து அவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
வரும் திங்கட்கிழமை, குளிர்கால ஓய்வுக்குப் பின்னர் கனடிய பாராளுமன்றம் கூடும். அதில் இணையம் வழியாகக் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார் ட்ரூடோ.
கனடிய அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி உட்பட பலருக்கு அண்மைய மாதங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டது.
0 Comments