சர்வதேச அளவில் தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கையும் 38 கோடியே 20 இலட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கோடியே 65 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 9 இலட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள பிரசில், இங்கிலாந்து, ரஷ்யா, ஃபிரான்ஸ், துருக்கி, ஈரான், அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 கோடியே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. 57 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு பலியாகிவிட்டனர். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 30 கோடியே 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
0 Comments