header ads

நோபல் பரிசு வென்ற மலாலா இல்லற வாழ்வில் இணைத்தார்

பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு கல்வி வேண்டும் என்பதற்காக போராடிய மலாலாவை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் லண்டனில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், 24 வயதான மலாலா, தனது ட்விட்டர் பதிவில், அசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், பிர்மிங்காமில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments