கடுமையாக உயர்ந்திருந்த வாகனங்களின் விலை சற்று குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகனங்களின் விலைகள் தற்போது நிலையான மட்டத்தில் இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
எனினும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. டொலரின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் உதிரிப் பாகங்களின் விலை உயர்ந்துள்ளதாக அவர் தெரி வித்துள்ளார்.
0 Comments