பயணக்கட்டுப்பாடு நிறைவுக்கு வரும் வரை நாட்டிலுள்ள கலால் திணைக்களத்தினால் அனுமதிப்பத்திரம் கொண்ட அனைத்து நிலையங்களுக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சட்டவிரோதமாக, இரகசியமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவை எடுத்துள்ளதாக, கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர், கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
நாட்டில் எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி வரை தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments