மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் இக்காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி மட்டக்களப்பு நகர்ப் பகுதிக்குள் அநாவசியமாகப் பயணிப்போரைச் சோதனையிடும் பணிகளை இன்று (31) திங்கட்கிழமை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
கல்லடிப் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், வீதிகளில் பயண அனுமதிப்பத்திரம் இன்றி அநாவசியமாகப் பயணிப்போர் இனங்காணப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments