கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதில் மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தடுப்பூசி மூலம் பொது மக்களின் நோய்த்தடுப்பிற்கான தற்காலிக மருந்தே தவிர கொரோனா கட்டுப்பாட்டைப் நடைமுறையில் பூரணமாக அகற்றாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இதன் முழு செயல்முறையையும் திட்டமிட்ட ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியமாகும்.
இந்த தொற்றுநோய் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரவுவதால், இது ஏற்கனவே அனைத்து சமூகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் விடயமாக மாறியுள்ளதால், இது மெதுவான போக்கை, குறுகிய பார்வை மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட கொள்கையாக மாறியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் நாட்டின் முன்னணி துறவிகளில் ஒருவரும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் துறவிகளில் ஒருவருமான பத்தேகம சமித தேரர் காலமானார். இதற்கு முன்னதாக சேருவில மங்கள ரஜமஹா விகாரையின் தலைமை தேரர் அமரபுர கல்யானவங்ச மகா பிரிவினையின் கிழக்கு மாகாண பிரதான தலைமை தேரர் முங்கானே மெத்தானந்த கொவிட் வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மரணித்ததோடு, அனுராதபுரம், பன்டுலுகம, பெத்தானகம விகாரையைச் சேர்ந்த ஒரு தேரரும்,அநுராதபுர சாராணந்த பிரிவேனாவைச் சேர்ந்த கலாநிதி தலன்பிட்டியே மெத்தனந்த தேரரும், தம்புல்ல பனன்பிட்டியில் வாழ்ந்த ஒரு துறவியும், கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக அதே விகாரைகளில் இறந்தார்கள்.
இந்த நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பேரழிவு தாக்கியுள்ளது என்பதை இது குறிக்கிறது.இது குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி அனைத்து மதத் தலைவர்களுக்கும், குறிப்பாக துறவிகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
0 Comments