header ads

Twitter அறிமுகப்படுத்தும் Super Followers - நெட்டிசன்கள் எதிர்ப்பு

ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள சூப்பர் ஃபாலோ என்ற புதிய அம்சத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ஹேஸ்டேக் Rip twitter - ஐ வைரலாக்கினர்.

ட்விட்டர் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை வெர்ச்ஷூவல் மீட்டிங்கில் நடைபெற்றது. இதில், ட்விட்டரில் அறிமுகப்படுத்த உள்ள புதிய அம்சங்கள் மற்றும் வருவாய் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவில் `Super Follow’ என்ற பணம் செலுத்தும் அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ட்விட்டர் யூசர்கள், தங்களின் எக்ஸ்க்ளூசிவ் கன்டென்ட், நியூஸ் லெட்டர்களை ஃபாலோவெர்ஸூக்கு ( Followers) பெய்ட் (paid) சர்வீஸாக கொடுக்கலாம் என கூறியுள்ளது. சூப்பர் ஃபாலோவராக இருக்கும் எத்தனை பேருக்கும் ட்விட்டர் யூசர் தங்களின் பெய்ட் கன்டென்டை கொடுக்கலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன் மூலம் வருவாய் 2023 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் என ட்விட்டர் நிறுவனம் கணித்துள்ளது. விளம்பரம் மூலம் மட்டுமே வருவாய் கிடைத்து வந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக வருவாய் ஈட்டும் நிலைக்கு நகர வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்சே (Jack Dorsey) தெரிவித்துள்ளார். வெர்ச்ஷூவல் மீட்டிங்கில் பங்கேற்ற அவர், 2023 ஆம் ஆண்டுக்குள் ட்விட்டரின் வருவாயை 7.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தங்களின் புதிய அம்சத்தை குறைந்தபட்சம் 315 மில்லியன் யூசர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாக ஜாக் டோர்செ தெரிவித்துள்ளார்.

சூப்பர் பாலோ பெயட் சர்வீஸ் குறித்து இன்னும் பயனாளர்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. டிவிட்டரில் பதிவிடும் கன்டென்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் பிரபலங்களுக்கும், படைப்பாளர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக #RipTwitter-ஐ வைரலாக்கியுள்ள நெட்டிசன்கள், ட்விட்டரில் பதிவிடும் கன்டென்டுகளை காசு கொடுத்து பார்க்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியிருப்பதுடன், அதற்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளனர். அதற்கு பதிலாக, எடிட் ஆப்சனை கொடுக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல், ஃபேஸ்புக்கில் இருப்பது போலவே ஒரே தலைப்பில் கலந்துரையாடும் வகையிலான குழுக்கள் போன்ற அமைப்பை ட்விட்டரில் உருவாக்கும் முனைப்பிலும் அந்த நிறுவனம் இருக்கிறது. இதனுடன் மேலும் சில பாதுகாப்பு அம்சங்களும் ட்விட்டரில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 24 மணி நேரத்தில் மறைந்து விடக்கூடிய 'Fleet' என்னும் வசதியைச் சென்ற ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments