ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்து ஆறுவருடங்களின் பின்னர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேர்காணலொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர் தான் எதிர்கொண்ட மன அழுத்தங்களே இதற்கு காரணமாகயிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற மகிந்த ராஜபக்ச என்னை கடும் மன அழுத்தங்களிற்கு ஆளாக்கினார் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி எனது சொந்தக்கட்சிக்காரர்களும் என்னை விட்டு விலகிச்சென்றனர் இதுவும் என்னை மன அழுத்தத்திற்குள்ளாக்கியது என தெரிவித்துள்ளார்.
எனது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னர் நான் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர் என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். என்றாலும் தற்பொழுது சிகிச்சைகளின் பின்னர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments