header ads

கோட்டா, மஹிந்தவிடமிருந்து இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையுடனான தொடர்புகளை விரிவுப்படுத்துவது குறித்தும், இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்களின் நிலை தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதியுடன் தாம் கலந்துரையாடியதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் ஒதய்மீன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பஹ்ரைன் இளவரசரான சல்மான் பின் ஹமாத் அல் கலீபாவுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை விரிவுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.



Post a Comment

0 Comments