ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் திடீர் என இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் நேற்று (22 திகதி) மாலை 5 மணியளவில் நடைபெறவிருந்தது. என்றாலும் திடீர் எனக் குறித்த அமைச்சரவைக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மூலம் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் (23) மாலை 5 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments