திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக 67 கிலோமீட்டர் நீளமான யானை வேலி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நிர்மாணிக்கப்பட்ட உள்ளதாகவும் 20 கிலோமீட்டர் நீளமான யானை வேலி புனர் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
குறித்த வேலைகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீடு மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அத்துடன் யானைகள் உடைய தாக்கம் உள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எதிர் வருகின்ற காலங்களில் அந்தப் பிரதேசங்களிலும் பாதுகாப்பான யானை வேலி அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தின் அவ்வாறான பல பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் எதிர்வருகின்ற காலங்களில் யானை மனித மோதல் தாக்கத்தைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களம் தற்போது புதிய தொழில்நுட்ப உபாயங்களைக் கையாண்டு வருகின்றது. குறிப்பாக மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குப் பிரத்தியேகமாக யானை வேலி அமைப்பதற்கும் அதேபோன்று பயிர் நிலங்களுக்குப் பிரத்தியேகமான யானை வேலி அமைப்பதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
பயிர் நிலங்களைப் பாதுகாப்பதற்கான யானை வேலிப் பயிர் செய்யப் படுகின்ற காலங்களில் மாத்திரம் ஏற்படுத்தப்படும். பயிர்ச்செய்கை முடிவடைந்த பின்னர் அவற்றைப் பாதுகாப்பான முறையில் அகற்றி வைக்கக் கூடியதாகக் காணப்படும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments