header ads

5000 போலி நாணயத்தாள் குறித்து அவதானமாகவிருக்கவும்

பண்டிகை காலத்தில் பொது மக்கள் போலி நாணயத்தாள்களின் பயன் பாடு குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 5000 ரூபா போலி நாணயத் தாளுடன் முகத்துவாரம் பகுதியில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ந்தும் இவ்வாறான குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, பண்டிகை காலத்தில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக 5,000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது போலி நாணயத்தாள் குறித்து கவனமாகச் செயற்பட வேண்டும்.

அவ்வாறு போலி நாணயத்தாள்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு  அறிவிக்குமாறும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments