பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் விநோதமான வானிலை நிலவி வந்தது. கடந்த வாரம் முழுவதும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அசாதாரண சூழலில் வாழ்ந்து பழகியவர்களுக்கும் இப்பனிப்பொழிவு சற்று சிரமத்தையே தந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைப்பனியால் உறைந்து போனது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நீர்வீழ்ச்சி தொடக்கம் முதல் நீர் தேங்கும் இடம் வரை அனைத்தும் உறைந்திருப்பது பார்வையாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு தற்போது அமெரிக்காவில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments