header ads

இணையம் ஊடாக பணமோசடியில் ஈடுபட்டவர்கள் கைது



பரிசு கிடைத்திருப்பதாகத் தெரிவித்து, இணையம் ஊடாக 17,45,000 ரூபாயை மோசடி செய்த 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேலியாகொட பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, களணி பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களுள் 4 நைஜீரிய பிரஜைகள், இரண்டு பெண்கள் மற்றும் இலங்கை தம்பதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, குறித்த நைஜீரிய பிரஜைகள் தங்கியிருந்த கல்கிஸ்ஸ பிரதேச வீடொன்றிலிருந்து மடிகணினிகள் 2. வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் 79, போலி நாணயத்தாளை அச்சிட பயன்படும் கடதாசி மற்றும் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி அழைப்பு எடுப்பது போல், இலங்கையிலிருந்தவாறே இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments