கொவிட 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக, கடந்த மார்ச் 28 முதல் இதுவரை 459 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சரால் ஏற்கனவே 2020 ஏப்ரல் 11 திகதியிடப்பட்ட 2170/8 எனும் அரசாங்க வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்கள் அனைவரும் தகனம் செய்யப்பட்டு வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில், குறித்த வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யும் வகையில், சுகாதார அமைச்சரினால் தற்போது புதிய அதி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments