header ads

இராணுவத்தில் இணையச் சவுதி அரேபியப் பெண்களுக்கு அனுமதி

இராணுவத்தில் இணைவதற்குச் சவுதி அரேபியப் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சவுதி அரேபியப் பெண்கள் இராணுவத்தில் இணையலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி பெண்கள் சவுதி அரேபிய இராணுவம், ராயல் சவுதி வான் பாதுகாப்பு, ராயல் சவுதி கடற்படை, ராயல் சவுதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பெண்கள் இராணுவத்தில் பணியாற்றப் பெண்ணின் வயது 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உயரம் 155 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்கக் கூடாது.

திருமணம் முடிக்காதவர் இராணுவத்தில் இணைவதானால் சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments