header ads

நேற்று மேலும் 03 கொவிட் மரணங்கள் - விபரம் இணைப்பு



கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது.

01. வத்தளை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒரு வர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப் ரவரி மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03.வலப்பன பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் , கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமை காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments