முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய சகாவும் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான அப்துல் சத்தார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
கொழும்பில் (06) ஜனாதிபதியை சந்தித்த அப்துல் சத்தார், தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஜனாதிபதியின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலும் அப்துல் சத்தார் கலந்துகொண்டார். முஸ்லிம்கள் மத்தியில் மிக பிரபலமான இவர், அரசியல் பேதமின்றி முஸ்லிம்களால் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியாவார். ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச்செயலாளரும் ஆவார்.
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க பெறுவாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளராகவும், குருநாகல் மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றினார்.
0 Comments