இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று ரி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தது. இதில் ரி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தது.
எனினும், ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியிருந்தது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது.
0 Comments