header ads

அந்தமான் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த ரொஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டனர்

அந்தமான் கடற்பகுதியில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 81 பொதுமக்களையும் 8 உடல்களையும் இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். எனினும் மீட்கப்பட்டவர்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.ஒருவர் காணாமல்போயுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து தப்பிய பல இலட்சம் ரொகிங்யா அகதிகள் வாழும் கொக்ஸ் பசார் பகுதியிலிருந்து குறிப்பிட்ட படகு 11ம் திகதிபுறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்களின் பின்னர் படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது, படகில் உணவு மற்றும் குடிநீரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயிருடன் காப்பாற்றப்பட்டவர்களில் பலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முற்றாக நீர்தன்மை இழந்த நிலையிலும் காணப்பட்டனர் என இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அகதிகளிற்கு உதவுவதற்கு அனுப்பப்பட்ட இந்திய கடற்படையின் இரு கரையோரக்காவல் பிரிவின் கப்பல்கள் அகதிகளிற்கு உதவின அவர்களில் 23 பேர் குழந்தைகள் என இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர்களை பங்களாதேசிற்கு திருப்பி அனுப்புவது குறித்த பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments